இந்நிலையில் தற்போது பேஸ்ட் பிரஷ் மக்கள் மத்தியில் பயன்படுத்த துவங்கியதும், வேப்பம் குச்சி மற்றும் ஆலங்குச்சியின் பயன்பாடு குறைந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் தற்போது கெமிக்கல் இல்லாத வாழ்க்கையை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர். தன் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் கெமிக்கல் இல்லாமல் முற்றிலும் இயற்கையான பொருட்களை அதிகம் பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில் அந்நாட்டு மக்கள் மத்தியில் தற்போது வேப்பங்குச்சியின் பயன்படு அதிகரித்துள்ளது. அந்நாட்டில் வேப்பமர வளராதததால் அவர்கள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வேப்பங்குச்சியை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் வேப்பமரங்களல் இலவசமாக கிடைக்கும் வேப்பங்குச்சி தற்போது அமெரிக்காவில் ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க விலையில் 24.63 டாலருக்கு வேப்பங்குச்சிகள் விற்பனையாகிறது. இதன் இந்திய மதிப்பு ரூ1800 ஆகும். இந்தியாவில் இலவசமாக கிடைக்கும் பொருள் அமெரிக்காவில் ரூ1800க்கு விற்பனையாவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வேப்பங்குச்சியின் மதிப்பை அறிந்து அதை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில் இந்தியாவில் அதன் பயன்பாடு குறைந்தது வருந்ததக்கது தான். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்