சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் இரகசியமாக குழாய் பதித்து அதில் இருந்து வரும் நீரை இயற்கையான அருவி என நம்பவைத்துள்ளார்கள் இதனை மலையேறுபவர் ஒருவர் கண்டுபிடித்ததை அடுத்து, சீன அதிகாரிகள் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சீனாவில் உள்ள 1,024 அடி உயரமுள்ள யுண்டாய் மலை நீர்வீழ்ச்சிக்கு உலகம் முழுவது இருந்து பலர் வருகை தருகின்றனர், இந்த நீர்வீழ்ச்சி சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது
சுமார் 314 மீட்டர் செங்குத்து வீழ்ச்சியுடன் ஆசியாவிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி என அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சியில்தான் இது போல் நடந்துள்ளது
இது குறித்து பூங்கா நிர்வாகம் யுண்டாய் மலையின் அழகிய பகுதி ஏழு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு வந்துள்ளார்கள், கோடை காலங்களில் வறண்டு தண்ணீர் இல்லாமல் போனால் பார்வையாளர்கள் ஏமாந்து செல்லகூடாது என்பதற்க்காக இந்த ஏற்பாடு என தெரிவித்துள்ளார்கள்