பலத்த பாதுகாப்பு – இந்தியா, பாகிஸ்தான் போட்டி இன்று

0 1

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதும் குரூப் ஏ பிரிவு போட்டி இன்று நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியை முன்னிட்டு நியூயோர்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு அணிகளும் இடம்பெற்றுள்ள குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை போட்டி நடைபெறும்போது காலநிலை சீராக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆனால் மழை பெய்து ஆட்டத்தில் முடிவு கிட்டாமல் போனால் அது இந்தியாவுக்கு சாதகமாக அமைவதுடன் ஐக்கிய அமெரிக்காவுடன் சுப்பர் ஓவரில் தோல்வி அடைந்த பாகிஸ்தானுக்கு பாதகமாக அமையும்.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ், ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், மொஹமத் சிராஜ்.

பாகிஸ்தான்: மொஹமத் ரிஸ்வான், பாபர் அஸாம் (தலைவர்), உஸ்மான் கான், பக்கார் ஸமான், ஷதாப் கான், இப்திகார் அஹ்மத், இமாத் வசிம், ஷஹீன் ஷா அப்றிடி, நசீம் ஷா, மொஹமத் ஆமிர், ஹரிஸ் ரவூப்.

Leave A Reply

Your email address will not be published.