ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் இராணுவசூன்ய பிரதேசத்தை உருவாக்குவது எங்கள் இலக்கு- ரஷ்யாவிற்குள் ஊருடுவி தாக்குதலை மேற்கொண்ட புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவை முழுமையாக விடுதலை செய்வதே தங்கள் நோக்கம் என Freedom of Russia Legion என்ற அமைப்பே இதனை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் பெல்கொரொட் நகரின் மீதான தாக்குதலை அமைதிகாக்கும் நடவடிக்கை என இந்த அமைப்பு வர்ணித்துள்ளது.
ரஷ்யாவிற்கும் உக்ரைனிற்கும் இடையில் இராணுவசூன்ய பிரதேசத்தை உருவாக்குவது புட்டின் ஆட்சிக்கு சேவைசெய்யும் படையினரை அழிப்பது புட்டின் ஆட்சிக்கு எதிராக போராடுவது சாத்தியமான விடயம் என மக்களிற்கு நிருபிப்பது ஆகியன தங்களின் இலக்குகள் என புட்டின் எதிர்ப்பு ரஸ்ய குழு தெரிவித்துள்ளது.
இந்த இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.