ஒடிசா சட்டசபை தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. அதேபோன்று காங்கிரஸ் சார்பில் முஸ்லிம் பெண் எம்.எல்.ஏ., ஒருவரும் தேர்வு செய்யப்பட்டு அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இடம் பெற்றுள்ளார்.
ஒடிசாவின் பாராபதி கட்டாக் தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டவர் சோபியா பிர்தவுஸ். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் பூர்ண சந்திர மகாபத்ராவை 8,001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
32 வயது இளம் எம்.எல்.ஏ.வான சோபியா பிர்தவுஸ் அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை ஒடிசா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான முகமது மொகிம் ஆவார். என்பது குறிப்பிடத்தக்கது