ஒலுவில் துறைமுகத்தை மீள் புனரமைப்பதில் காணப்படும் சவால்கள் தொடர்பாகவும், நடைமுறையில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராயும் கூட்டம் கொழும்பிலுள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று(11) நடைபெற்றது.
இதன்போது, ஒலுவில் துறைமுகத்தை புனரமைப்புச் செய்து பயனுடையதான திட்டங்களை முன்னெடுக்கும் திட்ட வரைபுகளை பல நிறுவனங்கள் அமைச்சரிடம் முன்வைத்துள்ள நிலையில் அவை தொடர்பில் ஆராயவும் அதன் சாதக பாதகங்கள் தொடர்பில் தொடர்புபட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளவுமாக மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது கடற்றொழில் அமைச்சு, துறைமுக அதிகாரசபை , கரையோர பாதுகாப்புத் திணைக்களம் , கடற்படை அதிகாரிகள் , ஒலுவில் மீன்பிடிச் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.