யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,
Montreal, Brampton ஆகிய இடங்களை
வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா சிறிகாந்தி
அவர்கள் பெப்ரவரி மாதம் 12 ம் திகதி புதன்கிழமை
அன்று காலமானார்.
அன்னார், நீர்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்ற
தியாகராஜா – அன்னலட்சுமி தம்பதிகளின் மகளும்,
கரம்பொன்னைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான
சிங்கராயர் செலஸ்டினா(புஸ்பராணி) தம்பதிகளின்
மருமகளும்,
எல்மோ சிங்கராயர் அவர்களின் மனைவியும்,
லக்ஷ்மன், காயத்திரி ஆகியோரின் தாயாரும்,
றோசாலினா, விஷால் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற சிறிதரன், ஜெயதரன், சிறிநாதன்,
ஸ்ரீஸ்வரி, வனஜா, கெங்காதரன் ஆகியோரின்
சகோதரியும்,
பஞ்சாட்சரதேவன் அவர்களின் உடன்பிறவாச்
சகோதரியும்,
ஹேமமாலினி, ஜெயலட்சுமி, சிவஞானவதி,
தண்டபாணி, ரகுராம், சிவசோதி, விஜயராணி
ஆகியோரின் மைத்துனியும்,
ஈசன், நிம்மி, ஒஸ்கார், ஜீவன், விலியன், டக்கி
ஆகியோரின் அண்ணியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பெப்ரவரி மாதம் 16 ம் திகதி
ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிமுதல் 9
மணிவரையும், மறுநாள் பெப்ரவரி மாதம் 17 ம் திகதி
காலை 9 மணிமுதல் 10 மணிவரையும், இல 737
Dundas St East, Mississauga வில் அமைந்துள்ள St John’s
Dixie Cemetery & Crematorium இல் பார்வைக்காக
வைக்கப்பட்டு, தொடர்ந்து 10 மணிக்கு ஈமை
கிரியைகள் இடம்பெற்று பின்னர் நண்பகல் 12
மணிக்கு அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்
அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
குமார் 514 291 5846
பாபு 416 618 7435
மதன் 416 885 7706